கொரோனா என்பது என்ன, அது விஷயமாக நான் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா வைரஸ், அல்லது கொரோனா என்பது மக்களுக்கிடையே நோயை உண்டாக்கி அதனை பரவச்செய்யக்கூடிய ஒரு சிறிய (வெறும் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு மிகச்சிறிய) நுண்ணுயிர் ஆகும். கொரோனா என்பது வறட்டு இருமல், சுவாசிப்பதில் சிரமம், காய்ச்சல் மற்றும் உடம்பு வலி போன்ற சளிக்காய்ச்சலுக்கான அறிகுறிகளை உண்டாக்குகிறது. கொரோனா பெரும்பாலும் சுவாசப்பாதை அமைப்பை பாதிக்கிறது. பெரும்பாலான தொற்றுக்கள் அபாயகரமானதாக இல்லாதபோதிலும், அவை நிமோனியா என்னும் சளிக்காய்ச்சலை (நுரையீரலில் ஏற்படும் கடுமையான ஒரு தொற்றினை) உண்டாக்கலாம், மற்றும் நிலைமை கடுமையாகும்போது மரணத்தையும் உண்டாக்கலாம்.

யாருக்கு வேண்டுமானாலும் கொரோனா தொற்றலாம். முது வயதினர், மற்றும் ஏற்கனவே பிற நோய்களை, எடுத்துக்காட்டாக சுவாச நோய்கள், புற்றுநோய் அல்லது நீரிழிவு நோய்போன்றவற்றைக் கொண்டவர்கள், மிகக் கடுமையான விளைவுகளை அனுபவிக்கக் கூடிய பெருத்த ஆபத்து உள்ளது.

கொரோனா என்பது, அது தொற்றிக்கொண்ட ஒரு நபரிடமிருந்து எதிரில் இருக்கும் நபர்கள், பொருட்களின் மேற்பரப்புக்கள் அல்லது உணவுகளின் மீது அவர் சுவாசத்தை வெளிவிடும்போது, இருமும்போது, தும்மும்போது நுண் துளிகளாக விழுந்து பரவுகிறது. இது வாய், மூக்கு மற்றும் கண்கள் வழியாக உடலில் நுழைகிறது. உடலில் ஒருமுறை ஒட்டிக்கொண்டவுடன், அது பல்கிப்பெருகி மற்ற பகுதிகளுக்கு பரவத் தொடங்குகிறது. நோயின் வெளிப்புற அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பாக, கொரோனா வைரஸ் ஆனது 14 நாட்கள் வரை அந்த உடலில் வாழக்கூடும். எனவே பொதுமக்களை கொரோனா இவ்வாறாக தொற்றிக்கொள்ளலாம், ஆனால் அது அவர்களுக்குத் தெரியாது என்பதுடன், அந்த வைரஸை அவர்கள் மற்றவர்களுக்கும் பரப்பலாம்.

கொரோனா வைரஸானது, நுண்ணுயிர் எதிர்ப்பிகளாலோ அல்லது வீட்டு வைத்தியம் மூலமாகவோ அழிக்கப்படுவதில்லை. கொரோனா வைரஸ் உடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதன் மூலமும், அடிக்கடி கை கழுவுவதன் மூலமும் மட்டுமே இப்படி பரவுவதைத் தடுக்க முடியும்.

தொற்று ஏற்படுவதைத் தடுக்க, சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு உங்கள் கைகளை கழுவவும். உங்கள் கைகள் பார்வைக்கு அழுக்காக இல்லாவிட்டாலும் கூட அப்படிச் செய்யுங்கள். சோப்புடன் 20 விநாடிகளுக்கு, ஓடும் நீரில் மிக நன்றாகக் கழுவவும், விரல் நகங்களுக்கு கீழே தேய்த்து, கை மற்றும் மணிக்கட்டு முழுவதையும் கழுவுவதை உறுதி செய்யுங்கள். சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுவது உங்கள் கைகளில் இருக்கக்கூடிய வைரஸ்களைக் அழிக்கும். நீங்கள் உணவைத் தயாரிப்பதற்கு முன்பும், தயாரிக்கும்போதும், தயாரித்த பின்னும், கழிவறை பயன்பாட்டிற்குப் பின்னரும், சாப்பிடுவதற்கு முன்பும், நோயுற்றவர்களைப் பராமரிக்கும் போதும், விலங்குகள் அல்லது விலங்குகளின் கழிவுகளை கையாண்ட பின்னும், இருமல், தும்மலுக்கு பின்னரும் அல்லது மூக்கைச் சீந்திய பின்னரும் எப்போதும் கைகளைக் கழுவுங்கள்.

உங்கள் கைகளை முதலில் கழுவாமல் உங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும். கைகள் பல மேற்பரப்புகளைத் தொடுகின்றன என்பதால் வைரஸ்கள் பற்றிக்கொள்ளலாம். கைகள் அசுத்தமானதும், அவை உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாய்க்கு வைரஸை இடம் மாற்றம் செய்துவிடும். இந்த வைரஸ் அங்கிருந்து உங்கள் உடலில் நுழைந்து உங்களை நோய்வாய்ப்படுத்தும்.

காய்ச்சல் மற்றும் இருமல் அல்லது பிற சுவாசக் கோளாறு அறிகுறிகள் உள்ள எவருடனும் நெருக்கமான தொடர்பைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம் ஆகும். இருமும்போது அல்லது தும்மும்போது, எப்போதும் உங்கள் வாய் மற்றும் மூக்கை, மடக்கியபடியான உங்கள் முழங்கையால் அல்லது ஒரு மெல்லிய காகிதம் அல்லது துணியால் மறைத்துக் கொள்ளவும். பின்னர் பயன்படுத்தப்பட்ட மெல்லிய காகிதம் அல்லது துணியை உடனடியாக அப்புறப்படுத்தவும். பொது இடத்தில் துப்ப வேண்டாம்.

இருமியபடியோ அல்லது தும்மியபடியோ இருக்கும் எவர் ஒருவரிடமிருந்தும் உங்களுக்கான இடைவெளியானது, குறைந்தது 1 மீட்டர் (3 அடி) தூரம் இருக்கும்படி பராமரிக்கவும். காய்ச்சல் மற்றும் இருமல் உள்ள எவருடனும் நெருக்கமான தொடர்பைத் தவிர்க்கவும்.

காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ள ஒருவரை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தால், ஒரு பாதுகாப்பு முகக் கவசம் அல்லது துணியாலான முகக் கவசத்தை அணிய மறக்க வேண்டாம்; குறிப்பாக, கை சுகாதாரத்தை கடைபிடிக்கவும்.

கொரோனா தொற்றினைத் தடுப்பதற்காக, மற்றவர்களுடன் உடல் ரீதியான தொடர்பைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. இன்னொருவருடன் கைகுலுக்கிவிட்டு பின்னர் உங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதன் மூலம், கொரோனா மற்றும் பிற வைரஸ்களை இடம் கடத்தலாம். ஆகவே மற்றவர்களைச் சந்திக்கும்போது, கைகுலுக்கியோ, கட்டிப்பிடித்தோ, முத்தமிட்டோ அவர்களை வாழ்த்த வேண்டாம். அதற்கு பதிலாக ஒரு கையசைப்பு, ஒரு தலையசைப்பு அல்லது தலை வணங்குவதன் மூலம் வாழ்த்தவும். நீங்கள் வசிக்கும் பகுதியில் கொரோனா இருப்பதாக நீங்கள் நினைத்தால், மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வீட்டிலேயே இருக்கவும்.

உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக நீங்கள் உணர ஆரம்பித்தால், அதாவது தலைவலி, மற்றும் கொஞ்சமாக மூக்கு ஒழுகுதல் போன்ற லேசான அறிகுறிகளாக இருந்தாலும் கூட, நீங்கள் குணமடையும் வரை வீட்டிலேயே இருங்கள். நீங்கள் தும்மினாலோ, வறட்டு இருமல் கொண்டிருந்தாலோ, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் காய்ச்சல் இருந்தாலோ, மருத்துவ உதவியை விரைவில் நாடவும்; ஏனெனில் சுவாசம் தொடர்பான நோய்த்தொற்று அல்லது பிற தீவிர நிலை காரணமாக இது உண்டாகியிருக்கலாம்.

கொரோனா பற்றிய தவறான நம்பிக்கைகள் மற்றும் வதந்திகள் மிகவும் ஆபத்தானவை என்பதுடன், அவை மக்களைக் கொன்றுவிடும். உதாரணமாக, ப்ளீச் அல்லது ஆல்கஹால் போன்ற பொருட்கள் குடிப்பதால், அவை கொரோனாவைத் தடுப்பதற்குப் பதிலாக உங்களுக்கு தீங்கு விளைவித்துவிடும். உங்கள் நண்பர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களிடமிருந்து நீங்கள் பெறும் தகவல்கள் கூட தவறானவையாக அல்லது ஆபத்தானவையாக இருக்கலாம். உங்கள் உள்ளூர் சுகாதார அதிகாரியிடமிருந்து கிடைக்கின்ற மிகச்சரியான பொதுச் சுகாதார ஆலோசனையை மட்டுமே பின்பற்றவும்.

இந்தச் செய்தியை பரப்புவதன் மூலம் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் நீங்கள் உதவ முடியும். தயவுசெய்து அதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; இதற்காக வாட்ஸ்அப் போன்ற செய்தி சேவையைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கது.

இந்த பொருளடக்கமானது, சுகாதாரம் பற்றிய அறிவை உலகளாவ எல்லோருக்கும் கேட்கும்படியாக எடுத்துரைக்கின்ற ஆடியோபீடியா (Audiopedia) வினால் வழங்கப்பட்டது. மேலும் தெரிந்து கொள்ள: www.audiopedia.org